• Thu. May 7th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்!!

ByKalamegam Viswanathan

Mar 14, 2023

நான்கு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் அந்தந்த வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதன் ஒரு பகுதியாகஅலுவலர்கள் திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகாவில் பணியாற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் அனைவரும் ஒன்றிணைந்து வட்டாட்சியர் அலுவலகம் முன்பு 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.CPS திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டுவர வேண்டும்.
நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஈட்டிய விடுப்பு சரண்டரை வழங்க வேண்டும்.பட்டப்படிப்பு ஊக்க ஊதிய உயர்வு வழங்க வேண்டும்.கூடுதல் பொறுப்பு ஊதியம் வழங்க வேண்டும்.போன்ற அம்சங்களை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.