• Thu. Jul 23rd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

பிளஸ் 1 பொதுத்தேர்வு தொடக்கம்..!

Byவிஷா

Mar 14, 2023

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 1 பொதுத்தேர்வு இன்று தொடங்கியது.
தமிழகம் மற்றும் புதுசேரியில் பதினொன்றாம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது. ஏப்ரல் 5 -ம் தேதி வரை நடைபெறும் இந்த பொதுத்தேர்வை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இருந்து 7 லட்சத்து 88 ஆயிரத்து 64 மாணவ மாணவிகள் எழுதுகின்றனர். தமிழகத்தில் இருந்து 3 லட்சத்து 60 ஆயிரத்து 908 மாணவர்கள், 4 லட்சத்து 12 ஆயிரத்து 779 மாணவிகள், மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் என 7 லட்சத்து 73 ஆயிரத்து 688 பேரும், தனித்தேர்வர்களாக 5 ஆயிரத்து 338 பேரும் தேர்வு எழுதுகின்றனர். சிறைவாசிகள் 125 பேர் தேர்வெழுத உள்ளனர். காலையில் 10 மணிக்கு மாணவர்களுக்கு கேள்வித்தாள் வழங்கிய பின்னர் 10 நிமிடம் அதை படிக்கநேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. மதியம் 1 மணி 15 நிமிடம் வரையில் தேர்வு நடைபெற உள்ளது.
தமிழகம் முழுவதும் நேற்று 12ம் வகுப்பு தேர்வுகள் தொடங்கிய நிலையில், இன்று 11ம் வகுப்பு பொத்தேர்வு தொடங்கியுள்ளது. நேற்று நடைபெற்ற 12ம் வகுப்பு பொதுத்தேர்வை 50,674 பேர் எழுதவில்லை என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. தேர்வு எழுத விண்ணப்பித்து இருந்த 8 லட்சத்து 51 ஆயிரம் மாணவர்களில் 50,674 பேர் முதல் நாளில் ஆப்சென்ட் ஆகியுள்ளதாக பள்ளி கல்வித்துறை தெரிவித்து இருந்தது குறிப்பிடதக்கது.