விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் காமெடி கலந்த சமையல் நிகழ்ச்சி “குக் வித் கோமாளி”. இதுவரை இரண்டு சீசன்கள் நடந்து முடிந்துள்ள நிலையில், மூன்றாவது சீசன் நடைபெற்று வருகிறது.
இரண்டாவது சீசன் அளவிற்கு மூன்றாவது சீசன் இல்லை என்று ரசிகர்கள் கூறி வந்த நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு, புகழும் தான் நடிக்கும் படங்களின் படப்பிடிப்புக்கு சென்றதால் அவராலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியவில்லை. இதனையடுத்து குக் வித் கோமாளில் நிகழ்ச்சிக்கு நீண்ட வாரங்களுக்கு பிறகு புகழ் ரீ- என்ட்ரி கொடுத்துள்ளார். அதற்கான ப்ரோமோ வீடியோ ஒன்றையும் விஜய் தொலைகாட்சி வெளியிட்டுள்ளது. ப்ரோமோவில் புகழ் சூதுகவ்வும் படத்தின் விஜய் சேதுபதி கெட்டப்பில் வருகிறார். இதனை பார்த்த புகழ் ரசிகர்கள் இணையத்தில் கொண்டாடி வருகின்றனர்.