• Fri. Aug 28th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

ரயிலில் ‘விக்ரம்’ பட போஸ்டர்!

‘மாஸ்டர்’ படத்துக்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கும் படம் ‘விக்ரம்’. இப்படத்தில் கமல், விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இந்தப் படத்தை ராஜ்கமல் நிறுவனம் மற்றும் டர்மரீக் மீடியா நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது.

படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் ஏற்கனவே முடிந்து, தொழில்நுட்ப பணிகளும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இப்படம் வரும் ஜூன் 3ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. மூன்று பெரிய ஹீரோக்கள் இணைந்து நடிப்பதால் ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இதனிடையே, படத்தை தமிழ்நாட்டு திரையரங்குகளில் வெளியிடும் உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியிருக்கும் நிலையில், படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன. அதன் ஒரு பகுதியாக, ஈரோட்டில் ஓடும் ரயிலில் விக்ரம் படத்தின் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோவை சதர்ன் ரயில்வே தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.