கமல்ஹாசன் நடிப்பில், விக்ரம் படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் நிறைவடைந்ததாக படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியது. இந்நிலையில், 110 நாட்களில் விக்ரம் பட ஷூட்டிங் முடிந்ததாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அதிகாரப்பூர்வமாக வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளார். ஆனால், இந்த வீடியோவில், கமல் மற்றும் விஜய்சேதுபதி இல்லாதது ரசிகர்களுக்கு சிறிய ஏமாற்றத்தை அளித்துள்ளது.
துப்பாக்கியில் இருந்து தோட்டா தெறிக்க ஒரு படப்பிடிப்பு நிறைவு வீடியோவை ஷேர் செய்து இந்த அறிவிப்பை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். அந்த துப்பாக்கியை வெறித்தனமாக பகத் ஃபாசில் சுடுகிறார்! அருகே லோகேஷ் கனகராஜ், நடிகர் நரேன் மற்றும் விக்ரம் படக்குழுவினர் உள்ளனர். ஆனால், வீடியோவில் கமல் மற்றும் விஜய்சேதுபதி இருவரையும் காணவில்லை என ரசிகர்கள் லோகேஷ் கனகராஜிடம் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
விக்ரம் படத்தின் டிஜிட்டல் மற்றும் சாட்டிலைட் உரிமத்தை ஸ்டார் நெட்வொர்க் 112 கோடி ரூபாய்க்கு வாங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், விக்ரம் படத்தின் இந்தி ரீமேக் வெர்ஷனும் 60 கோடிக்கு மேல் வியாபாரம் பேசப்பட்டு வருவதாகவும் கூடுதல் தகவல்கள் வெளியாகி உள்ளன.
