• Sat. May 2nd, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

என்னது? தளபதி 67 அப்டேட்டா?

தளபதி 67 படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய் தற்பொழுது இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் பீஸ்ட்” படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவைடைந்து வரும் ஏப்ரல் மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக விஜய் தனது 66-வது படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை வம்சி இயங்குவதாகவும், தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிப்பதாகவும் முன்னதாக அறிவிப்பு வெளியானது. இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனையடுத்து அவ்வப்போது சமூக வலைதளத்தில் தளபதி 67 குறித்த தகவல் பரவி வருவது வழக்கம் அந்த வகையில், தற்போது கிடைத்த தகவலின்படி, தளபதி 67 திரைப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது.

இதற்கு முன்பு விஜய்யை வைத்து லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாஸ்டர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில், நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகுமா என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்..