• Thu. Jul 23rd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

வெளியீட்டிற்கு முன்பே வசூல் குவிக்கும் விஜயின் வாரிசு!!!!

ByA.Tamilselvan

Sep 14, 2022

விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் புதிய தகவல் வெளியாகியுள்ளது. வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் திரைப்படம் ‘வாரிசு’. இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். வாரிசு இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அடுத்த மாத இறுதிக்குள் இதன் முழு படப்பிடிப்பும் முடிவடைந்துவிடும் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் இப்படத்தின் தொலைக்காட்சி உரிமை ரூ.50 கோடிக்கும் டிஜிட்டல் உரிமை ரூ.60 கோடிக்கும் விற்கப்பட்டுள்ளதாகவும் இதனால் தயாரிப்பாளர் மிகவும் மகிழ்ச்சி அடைந்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.