• Thu. Jul 23rd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

இந்தியன்-2விற்கு சென்னையில் பிரம்மாண்ட செட்…

Byகாயத்ரி

Sep 14, 2022

கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ’இந்தியன் 2’ படம் தொடங்கப்பட்டு 4 ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் ரிலீஸாகவில்லை. படப்பிடிப்புத் தளத்தில் நடந்த விபத்துக் காரணமாக மூன்று பேர் உயிரிழந்ததை அடுத்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அதன் பிறகு மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது தொடங்கி படப்பிடிப்பு நடந்து வருகிறது. அதில் கமல்ஹாசன் இன்னும் கலந்துகொள்ளவில்லை. கடந்த மாத இறுதியில் தொடங்கிய ஷூட்டிங் ஒரு வாரம் நடந்தது. அதன் பின்னர் இப்போது இயக்குனர் ஷங்கர் தன்னுடைய தெலுங்கு பட வேலைகளில் ஈடுபட்டுள்ளார். இதற்கிடையில் இந்தியன் 2 அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக சென்னையின் பிரபல ஸ்டியோக்களில் ஒன்றான பிரசாத் ஸ்டுடியோவில் பிரம்மாண்டமான செட் ஒன்று அமைக்கப்பட்டு வருகிறதாம். முக்கியமான காட்சிகள் அனைத்தும் இதில்தான் அடுத்து படமாக்கப்பட உள்ளதாம்.