• Mon. Jul 14th, 2025
WhatsApp Image 2025-07-12 at 10.04.57 PM
WhatsApp Image 2025-07-12 at 10.04.58 PM
WhatsApp Image 2025-07-12 at 10.04.57 PM (1)
WhatsApp Image 2025-07-12 at 10.04.56 PM (1)
WhatsApp Image 2025-07-12 at 10.04.58 PM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.30 AM
WhatsApp Image 2025-07-11 at 8.58.31 AM
WhatsApp Image 2025-07-11 at 8.58.31 AM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.29 AM (2)
WhatsApp Image 2025-07-11 at 8.58.30 AM (2)
WhatsApp Image 2025-07-11 at 8.58.29 AM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.27 AM (2)
WhatsApp Image 2025-07-11 at 8.58.28 AM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.30 AM (1)
previous arrow
next arrow

விஜய் ரசிகர்களால் மதுரையில் பரபரப்பு

ரஜினிகாந்தை எப்படியாவது அரசியலுக்குள் கொண்டுவர வேண்டுமென ரசிகர்கள் முயற்சித்தது போலவே, நடிகர் விஜய்யின் ரசிகர்களும் விஜயை அரசியலுக்கு வர வேண்டும் என்று இழுத்து வருகின்றனர்.

நடிகர் விஜயை பொறுத்தவரை தான் அரசியலுக்கு வருவதாக, இதுவரை வெளிப்படையாக அறிவிக்கவில்லை. அதே வேளையில் அரசியல் வேண்டாம் என்று மறுப்பு தெரிவிக்கவும் இல்லை. விஜய் நேரடியாக அரசியல் பேசாவிட்டாலும், தனது படங்கள் மூலம் தொடர்ந்து அரசியல் பேசி வருகிறார்.

வரும் உள்ளாட்சி தேர்தலில் விஜய்யின் மக்கள் இயக்கம் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும். ஆனால் நடிகர் விஜய்யின் பெயரை, மக்கள் இயக்கத்தை பயன்படுத்தாமல் சுயேட்சையாக போட்டியிட வேண்டும் என்று நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நடிகர் விஜயின் முழு சம்மதத்தின் பேரில் மக்கள் இயக்கம் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுகிறது எல்லோராலும் நம்ப பட்ட நிலையில், தனது பெயரையோ, தனது ரசிகர் மன்றத்தின் பெயரையோ பயன்படுத்துவதை தடை செய்யக் கோரி தனது தந்தை மற்றும் தாய் உட்பட 11 நபர்கள் மீது நடிகர் விஜய் சென்னை சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார் விஜய். இந்த வழக்கு இம்மாத இறுதியில் விசாரணைக்கு வர இருக்கிறது.இது விஜய்யின் ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

இந்த நிலையில் மதுரையில் உள்ள விஜய் ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டர்கள் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியதியுள்ளது. இதில் “2024 மதுரையில் முதல் மாநாடு, 2026இல் முதலமைச்சராக” ” தமிழக அரசியலின் மொத்த உருவமே” போன்ற பல வாசங்கங்கள் உள்ளன.