• Fri. Jan 23rd, 2026
WhatsAppImage2026-01-22at2244171
previous arrow
next arrow
Read Now

சர்ப்ரைஸாக வெளியான விஜய் 66 அப்டேட் – மகிழ்ச்சியில் ரசிகர்கள்

நெல்சன் இயக்கத்தில், நடிகர் விஜய்யின் 65-வது படம் ‘பீஸ்ட்’. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டேவும், வில்லனாக செல்வராகவனும் நடிக்கின்றனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் டெல்லியில் படப்பிடிப்பு நடந்து முடிந்தது.

இந்நிலையில், விஜய்யின் 66-வது படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி இப்படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபல்லி இயக்க உள்ளதாக அறிவித்துள்ளனர். இவர் ஏற்கனவே தமிழில் கார்த்தி நடித்த தோழா படத்தை இயக்கி உள்ளார்.

‘தளபதி 66’ படத்தை வெங்கடேஷ்வரா கிரியேசன்ஸ் சார்பாக பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார். இப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் தயாராக உள்ளது.

எந்தவித முன்னறிவிப்பும் இன்றி விஜய்யின் ‘தளபதி 66’ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.