• Fri. Apr 17th, 2026
WhatsAppImage2026-04-16at222113
previous arrow
next arrow
Read Now

விஜய் வசந்த் வாக்கு சேகரிப்பு

நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி பல்வேறு கட்சி சேர்ந்த வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கன்னியாகுமரி நாடாளுமன்ற இந்திய கூட்டணி வேட்பாளர் விஜய் வசந்த் இன்று நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் உள்ள பார்வதி புரம் பிள்ளையார் கோயில் முன்பு இருந்து திறந்தவெளி வாகன பிரச்சாரத்தில் ஈடுபட்டார். பின்னர் பள்ளிவிளை, வாத்தியார்விளை, அருகுவிளை, ஒழுகினசேரி, வடசேரி, வடிவீஸ்வரம் உள்ளிட்ட பகுதி மக்களிடம் திறந்த வெளி வாகனத்தில் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இதில் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் மற்றும் மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் நவீன் குமார் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்