• Thu. Mar 27th, 2025

விஜய் வசந்த் வேட்புமனு தாக்கல் அமைச்சர், மேயர், சட்ட உறுப்பினர், கூட்டணி கட்சியினர் உடனிருந்தனர்

தமிழகத்தில் நடக்க இருக்கும் மக்களவைத் தேர்தலில் வேட்பு மனு தாக்கல் இறுதி தினமான இன்று.கன்னியாகுமரி மக்களவை காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த், அமைச்சர் மனோ தங்கராஜ், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், தமிழக சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் குமார், குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ், முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜன்.காங்கிரஸ் கட்சியின் அனைத்து பிரிவுகளை சேர்ந்த பொறுப்பாளர்,இந்திய கூட்டணி கட்சியினர்.

இந்திராகாந்தி ரவுண்டானாவில் உள்ள இந்திரா காந்தியின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின் பெரும் கூட்டமாக ஊர்வலமாக சென்ற கூட்டத்தில் வந்த இளைஞர்கள். விஜய் வசந்தை சற்றும் எதிர்பாராத சூழலில் அவரை இளைஞர்களின் தோளில் தூக்கி அமர வைத்தபடி,வேட்ப்பு மனு தாக்கல் செய்யும் ஆட்சியர் அலுவலகம் வரை இளைஞர்கள் சுமந்து செல்ல முயல, ஆட்சியர் அலுவலகத்திற்கு 100_மீட்டர் முன் காவலர்கள் தடுத்து நிறுத்த முயல, அந்த பகுதியில் தடுத்து நிறுத்தி சில நொடிகள் ஒரு பரபரப்பான சூழலை காணமுடிந்தது.

காவல்துறை அதிகாரிகள் தடுத்த இடத்தில் இருந்து காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் விஜய் வசந்த், அமைச்சர் மனோ தங்கராஜ், நாகர்கோவில் மேயர் மகேஷ், காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர், மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ஆகிய 5_பேர் மட்டுமே, தேர்தல் அதிகாரியும், மாவட்ட ஆட்சியருமான ஸ்ரீதர் இடம் மனு தாக்கல் செய்தனர்.

ஆட்சியர் அலுவலகம் வளாகத்தை விட்டு வெளியே வந்த வேட்பாளர் விஜய் வசந்த், உடன் வந்த இந்திய கூட்டணி கட்சியினரை, கூடியிருந்த கூட்டத்தினர் உற்சாக குரல் எழுப்பி வரவேற்றனர்.