• Mon. Apr 29th, 2024

அனைத்து துறைகள் சார்ந்தும் புதுமையான வாக்குறுதி: அசத்தும் மதுரை பாராளுமன்ற தொகுதி சுயேட்சை வேட்பாளர் கோபிசன்

Byகுமார்

Mar 27, 2024

மதுரை பாராளுமன்ற தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் வேட்பாளர் கோபிசன் அறிவித்துள்ள பல்வேறு தேர்தல் வாக்குறுதிகள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. பல்வேறு துறைகள் சார்ந்த அவர் அளித்துள்ள தேர்தல் வாக்குறுதிகள் கவனிக்கத்தக்கவையாக உள்ளது.

மதுரை மாநகரின் மாஸ்டர் பிளான் இறுதி செய்து அதன்படி மாநகராட்சி மற்றும் நகராட்சி அமைப்புகளை வலுப்படுத்துதல் மாஸ்டர் பிளான் அடிப்படையில் Zone மற்றும் Classification வரைமுறை செய்து துறைசார்ந்த வளர்ச்சியை ஊக்கப்படுத்துதல். மாநகரில் பல சிறிய, நடுத்தர, வணிகக்கட்டிடங்களுக்கு மின் இணைப்பு அளிக்கப்படாமல் இருக்கின்றது. காரணம் மாநகராட்சியில் Completion Certificate பெறப்பட்டு மிவ்வாரியத்தில் சமர்பிக்கப்பட வேண்டும் என்ற காரணத்தினால், இது போன்ற கட்டிடங்களுக்கு தளர்வுகளை வரைமுறைப்படுத்தி மின் இணைப்பை கொடுக்கப்படுமேயானால், அதிகப்படியான வேலைவாய்ப்புகள் மாநகராட்சிப் பகுதிகளில் உருவாகும் வாய்ப்பு உள்ளது. வீடு கட்டுமானத்தில் 8000சதுரஅடி வரை உள்ள கட்டுமானத்துக்கு பணிநிறைவு சான்று (Completion Certificate) தேவையில்லை என்ற நடைமுறையைப் போல் வணிக வளாக கட்டிடங்கள் குறைந்தது 5000சதுரஅடி வரை (Completion Certificate) தேவையில்லை என்ற தீர்மானம் . மதுரை திருமங்கலம் to சுடர்நகர் to வாடிப்பட்டி (எலக்ட்ரிக் Train) சேவைகளை மத்திய அரசிடம் சுட்டிக்காட்டி அதை நடைமுறைப்படுத்த ஆவண செய்யவேண்டும். இதன் மூலம் தொழிலாளர்கள் குறைந்த செலவில் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பயணிக்க முடியும், அவர்களுடைய போக்குவரத்து செலவு கணிசமாக குறைவதுடன், பல துறை சம்மந்தப்பட்ட தொழில்களுக்கு அவர்களால் எளிதில் சென்றடைய முடியும்.அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் மதுரை மக்களின் பொழுது போக்கிற்காக தீம் பார்க் மிகப்பெரிய அளவில் கட்டமைத்து தரவேண்டும் இதனால் அரசிற்கும் தனியார்க்கும் நல்ல வருமானம் மற்றும் தொழில் வாய்ப்புக்கள் உருவாக்கப்படும்.தங்க கொல்லப்பட்டறை தொழில் (Gold Smith) செய்வோருக்கு தனியாக ஒரு இடம் ஒதுக்கி அவர்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கு அரசு உறுதுணையாக இருக்க வேண்டும். இதன் மூலம் அவர்களுடைய தொழில் உற்பத்தி அதிகரிக்கும். மதுரை மாநகருக்கு உள்ளே அமையப்பெற்ற Rice Mill களை மதுரை புறநகருக்கு இடமாற்றம் செய்ய ஆவண செய்யவேண்டும். இதனால் போக்குவரத்து நெரிசல் மிக அதிக அளவில் குறையும். வேலை செய்யும் மகளிர்க்காக வாகன உதவிக்கடன் மற்றும் மானியத்துடன் கூடிய திட்டம் செயல்முறை படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் மகளிர் அதிகப்படியான அளவில் பணியாளர்களாக மாறுவார்கள். மதுரை to தூத்துக்குடி (Bye Pas 4 way) நான்கு வழிச்சாலையில் Ware House Building (SEZ Zone) தனியாக அமைத்து தருவதன் மூலம் Export தொழில் மதுரை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் அதிகப்படியான வளாச்சியை அடையும்.வைகை ஆற்றில் 5 கிலோ மீட்டர் 1க்கு ஒரு சிறிய தடுப்பணை அமைப்பதன் மூலம் அதன் வழித்தடங்கள் அனைத்திலும் 5 முதல் 25 அடி ஆழத்திற்கு நீர் தேக்கி வைத்து நிலத்தடி நீரின் மட்டத்தை உயர்த்த முடியும்.பசுமை வீடுகள் கட்டுமான திட்டத்திற்கு (கார்பன் Less) Approval Fees தளர்வுகளை அறிவிப்பதன் மூலம் சுற்றுச்சூழல் சிறந்த முறையில் இருக்கும்.
தனியார் கட்டுமான நிறுவனங்கள் குறைந்த மதிப்பில் உருவாக்கும் வீடு திட்டங்களுக்கு Approval Fees ல் இருந்து விலக்கு அளிக்கப்பட்டால் அதிகப்படியான வீடுகள் கட்டுமான நிறுவனங்களால் கட்டப்பட்டு மக்களுக்கு வழங்கப்படும். வீட்டின் மதிப்பு (10 முதல் 12 லட்சம் வரை ) எளிய தொழிலாளர்கள் இதன் மூலம் பயனடைவார்கள்

பல்வேறு தேர்தல் வாக்குறுதிகள் அனைத்து தேர்தலை சந்தித்து வரும் பெரிய அரசியல் கட்சிகளுக்கு மத்தியில் மதுரை சுயேச்சை வேட்பாளர் கோபிசன் தமது முதல் வாக்குறுதியிலேயே முத்திரை பதிக்கிறார் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *