இந்திய நாடாளுமன்றத்தின் 18_வது தேர்தலில். கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் தந்தை வழியில், இரண்டாவது முறையாக கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியை இரண்டாவது முறையாக தக்கவைத்துக் கொண்ட விஜய் வசந்த், நேற்று இரவு (ஜூன்_04)ம் தேதி இரவு குமரி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் தேர்தல் அதிகாரியிடம், தமிழக அரசின் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் பிரின்ஸ், ராஜேஷ் குமார் ஆகயோருடன். கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் வெற்றி பெற்ற சான்றிதழை பெற்றுக் கொண்ட விஜயவசந்தின் கண்களில் கண்ணீர் திரையிட குமரி மக்களுக்கு அவரது இதயம் நிறைந்த நன்றியை தெரிவித்தார்.
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில். குமரியின் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 15,57,915யில் பதிவான வாக்குகள் 10,19,532 வாக்குகள் பதிவானது.
தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை நாகர்கோவில் கோணம் பொறியில் கல்லூரியில் 22 சுற்றுகளாக நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில், விஜய் வசந்திற்கு 5,38,611,வாக்குகளும்(காங்)பெற்றிருந்தார்,
பாஜக சார்பில் 10_வது முறையாக கன்னியாகுமரி மக்களவை தேர்தலில் போட்டியிட்ட பொன்.இராதாகிருஷ்ணன். 3,60,203 வாக்குகளும், நாம் தமிழர் வேட்பாளர் மரிய ஜெனிபர் பெற்ற வாக்குகள் 51,725.
திமுகவில் இருந்து விலகியதோடு, உடனடியாகவே அதிமுகவில் வேட்பாளராக போட்டியிட்ட பசலியான் நசரேயன் நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்டது. உடன் அதிமுக பெற்ற வாக்குகள் 40,781 மட்டுமே.
கன்னியாகுமரி மக்களவை இடை தேர்தலில் விஜய் வசந்த் அவரை எதிர்த்து போட்டியிட்ட பொன்.இராதாகிருஸ்ணனை 1,37,800 வாக்குகளில் தோற்கடித்தார், இம்முறை 18_வது நாடாளுமன்ற தேர்தலில் பொன்.இராதாகிருஸ்ணனை 1,78,408 வாக்குகளில் தோர்கடித்தது புதிய சாதனை படைத்தார்.
காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்ட வசந்த குமார்,தொடர்ந்து விஜய் வசந்த்திடம் என மூன்று முறை பொன்னார் தோல்வி அடைந்து குமரி மக்கள் மத்தியில் ஒரு பேசு பொருளாக மாறியது மட்டும் அல்ல. பொன்னாரி தோர்தல் போட்டியையும் முற்றுப் புள்ளி வைத்து விட்டதை குமரி மக்களின் பேச்சில் உச்சம் தொட்ட கருத்தாக வெளிப்படுகிறது.