• Sat. Sep 27th, 2025
WhatsAppImage2025-09-25at201821
WhatsAppImage2025-09-25at2018203
WhatsAppImage2025-09-25at2018204
WhatsAppImage2025-09-25at2018211
WhatsAppImage2025-09-25at2018202
WhatsAppImage2025-09-25at2018201
WhatsAppImage2025-09-25at2018212
previous arrow
next arrow
Read Now

மைக் டைசனுடன் அமெரிக்காவில் விஜய் தேவரகொண்டா

விஜய் தேவரகொண்டாவின் ‘லைகர்’ படத்திற்காக குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் படக்காட்சிகளை எடுக்க படக்குழு அமெரிக்கா சென்றுள்ளது.

விஜய் தேவரகொண்டா பிரபல இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் ‘லைகர்’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் சர்வதேச குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் நடிக்கிறார். முதன்முறையாக மைக் டைசன் நடிக்கும் முதல் இந்தியப் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் கரண் ஜோகர், நடிகை சார்மி, பூரி ஜெகன் நாத் இணைந்து தயாரிக்க்கும் இப்படம், தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்டப் பல மொழிகளில் வெளியாகிறது. Mixed Martial Arts நிபுணர் பற்றிய இந்த கதையில் ‘Iron Mike’ எனும் முக்கியமான கதாபாத்திரத்தில் மைக் டைசன் நடிக்கிறார்.

இந்த நிலையில் விஜய் தேவரகொண்டா – மைக் டைசன் காட்சிகளை எடுக்க படக்குழு அமெரிக்கா சென்றுள்ளது. அங்குள்ள ஹோட்டலில் பூரி ஜெகன்நாத் மற்றும் நடிகர் விஜய் தேவரகொண்டா உற்சாகமுடன் அமர்ந்திருக்கும் புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.