• Thu. Apr 25th, 2024

குற்றாலம் பேரருவியில் வெள்ளப் பெருக்கு

குற்றாலம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் பேரருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவ பெய்து வருவதையொட்டி தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கன மழை பெய்து வருகிறது. தென்காசி மாவட்டத்திலும் கடந்த சில தினங்களாக குற்றாலம், தென்காசி, செங்கோட்டை , கடையம், பாவூர்சத்திரம் , ஆலங்குளம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில் குற்றாலம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் நேற்று காலை பெய்த கனமழையால் காலை 10 மணிக்கு மேல் பேரருவியில் பாதுகாப்பு வளையத்தை கடந்து தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

இதேபோல் பழைய குற்றால அருவி, ஐந்தருவி, புலியருவி, சிற்றருவி என அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. குற்றாலத்தில் கொரோனா விதிமுறையால் சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிப்பதற்கு விதிக்கப்பட்ட தடை அமலில் இருப்பதால் அருவிகளை ரசித்து செல்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *