• Wed. Jul 15th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

மலையாள சூப்பர் ஸ்டாருடன் இணையும் விஜய்சேதுபதி

ByA.Tamilselvan

Nov 4, 2022

ரஜினி,கமலை அடுத்து மலையாள சூப்பர் ஸ்டார் ஒருவருடன் விஜய்சேதுபதி இணைத்து நடிக்க இருப்பதாக தகவல்வெளியாகி உள்ளது.
நடிகர் விஜய் சேதுபதி, தொடர்ந்து பல்வேறுபுதிய கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து வருகிறார்.
அந்த வகையில் ஹீரோவாக காந்தி டாக்ஸ், மெரி கிறிஸ்துமஸ் உள்ளிட்ட திரைப்படங்களிலும் மைக்கல், விடுதலை, மும்பைகர், ஜவான் உள்ளிட்ட முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். மேலும் தற்போது மீண்டும் சூப்பர் ஸ்டார் நடிகரின் திரைப்படம் ஒன்றில் விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாக தகவல் பரவி வருகிறது.
நடிகர் விஜய் சேதுபதி, தனது திறமையை நிரூபிப்பதோடு மட்டுமல்லாமல், திரைத்துறையில் உள்ள பெரியவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள விரும்பும் நடிகர்களில் ஒருவர். இதுவரை அவர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலகநாயகன் கமல்ஹாசன், மெகாஸ்டார் சிரஞ்சீவி, ஷாருக்கான் மற்றும் தளபதி விஜய் போன்ற முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.
அடுத்ததாக மற்றொரு ஜாம்பவானுடன் விஜய் சேதுபதி இணையவிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அவர் வேறு யாருமல்ல, பல தேசிய விருதுகளை வென்ற நடிகர் மம்முட்டி தான். இந்தப் படத்தை ‘காக்கா முட்டை’, ‘ஆண்டவன் கட்டளை’, ‘கடைசி விவசாயி’ ஆகியப் படங்களை இயக்கிய மணிகண்டன் இயக்குகிறார்.
இதையடுத்து விஜய் சேதுபதி தனது பிஸியான ஷெட்யூலுக்கு மத்தியில் இந்தப் படத்திற்கான தேதிகளை ஒதுக்கியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இன்னும் இரண்டு வாரங்களில் இதன் படப்பிடிப்பு துவங்கவிருக்கிறது. படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் குறித்த விபரம் விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.