• Wed. Jul 15th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

மிகபிரமாண்டமாக தயாராகும் கமலின் இந்தியன் -2

ByA.Tamilselvan

Nov 4, 2022

இந்தியன் -2 திரைப்படம் மிகபெரிய பட்ஜெட்டில் மிகபிரமாண்டமாக தயாராகி வருவதாத தகவல் வெளியாகி உள்ளது.
பிரமாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல் ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் இந்தியன் 2. கதாநாயகியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். இப்படத்தில் 60 சதவீத படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில் பல்வேறு காரணங்களால் நிறுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் சமீபத்தில் மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனிடையே இயக்குநர் ஷங்கர் ராம் சரணை வைத்து ஆர்.சி 15 படத்தை இயக்கி வருகிறார். எனவே ஒரே நேரத்தில் இந்தியன் 2 மற்றும் ஆர்.சி 15 ஆகிய இரண்டு படங்களின் படப்பிடிப்பும் நடைபெறும் என இயக்குநர் ஷங்கர் தெரிவித்திருந்தார்.
இப்படத்தை ரெட் ஜெய்ண்ட் மற்றும் லைக்கா இரு நிறுவனமும் ஒன்றிணைந்து இப்படத்தை தயாரிக்கிறது. சில வாரங்களுக்கு முன் துவங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இருந்து கூட சில புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் லீக்கானது.பொன்னியின் செல்வனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் உருவாகும் பிரமாண்ட திரைப்படமாக இந்தியன் 2 அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், மீண்டும் துவங்கியுள்ள இந்தியன் 2 திரைப்படம் சுமார் ரூ. 231 கோடி பட்ஜெட்டில் உருவாகி வருகிறது என தகவல் வெளியாகியுள்ளது.