• Wed. Sep 2nd, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

500 கோடி வசூலை எட்டுமா ? அவதார்-2

ByA.Tamilselvan

Nov 4, 2022

அவதார் -2 இந்தியாவில் மட்டும் ரூ500கோடி வசூலை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவதார் 2க்கான டிரைலர் கடந்த சில தினங்களுக்கு முன் வெளியாகி சினிமா ரசிகர்களிடையே மிகபெரிய அளவில் வரவேற்பை பெற்றது.இந்நிலையில் அவதார்-2 இந்தியாவில் மட்டும் ரூ500கோடி வசூல் செய்யும் என்று பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 13 ஆண்டுகளுக்கு முன் வெளியான முதல்பாகம் இந்தியாவில்130கோடி வசூல் செய்து சாதனைபடைத்தது. அதன்பின் வெளியான அவெஞ்சர்கஸ் இன்ஃபினிடி வார் ரூ300 கோடி வசூல் செய்தது. அதே போல அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் ரூ400 கோடி வசூல் செய்தது. இந்நிலையில் அவதார் -2 மீண்டும் வசூல் சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.