• Sun. Nov 10th, 2024

படப்பிடிப்பிற்காக ஐதராபாத்திற்கு புறப்பட்ட விஜய்! – வைரல் வீடியோ!

சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான “பீஸ்ட்” திரைப்படம், கலவையான விமர்சனத்தை பெற்றுது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், இதுவரை, உலகம் முழுவதும் 230 கோடிக்கு மேல் வசூல் செய்திருந்தாகவும் தகவல்கள் வெளியானது.

பீஸ்ட் படத்தை தொடர்ந்து விஜய் தற்போது இயக்குனர் வம்சி இயக்கத்தில் தனது 66 வது படத்தில் நடித்து வருகிறார், இந்த படத்திற்கான முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில், விறு விறுப்பாக நடந்து முடிந்த நிலையில், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெறவுள்ளதாக இயக்குனர் வம்சி தெரிவித்திருந்தார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக முதன் முதலாக ராஷ்மிகா நடிக்கிறார். தமன் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார். படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தளபதி 66 இரண்டாம் கட்ட படப்பிடிப்பிற்காக நடிகர் விஜய் ஐதராபாத்திற்கு புறப்பட்டுச் சென்ற வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *