விஜய் நடிப்பில் வெளியான “பீஸ்ட்” திரைப்படம், கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. இருப்பினும், வசூலில் பல சாதனைகளை படைத்து வருகிறது. இதுவரை, உலகம் முழுவதும் 230 கோடிக்கு மேல் வசூல் செய்திருந்தாகவும் தகவல்கள் வெளியானது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருந்தார். செல்வராகவன், விடிவி கணேஷ், யோகி பாபு, சதீஷ் போன்ற பல நடிகர்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்நிலையில் படத்தில் இடம்பெற்ற விஜய் ஜாலியா ஜிம்கானா பாடல் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றிருந்த நிலையில், தற்போது அந்த பாடல் வெளியாகியுள்ளது.