• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

திமுகவை வெறுப்பேற்றிய விஜய் ரசிகர்கள்.. வைரல் போஸ்டர்!

By

Sep 15, 2021 , , ,

மதுரையைப் பொறுத்தவரை போஸ்டர் கலாச்சாரத்திற்கு என்றுமே தனி மவுசு உண்டு. விதவிதமான போஸ்டர்கள் மற்றும் பிளக்ஸ் பேனர்களை வைத்து மக்களை சிரிக்கவும், சிந்திக்கவும் வைப்பதில் மதுரைவாசிகள் தனித்து நிற்கிறார்கள். ஆனால் சில சமயங்களில் அப்படி ஒடப்பட்டும் போஸ்டர்கள் மிகப்பெரிய சர்ச்சையை உருவாக்குவதும் உண்டும்.

 

குறிப்பாக தல, தளபதி ரசிகர்கள் மதுரையில் ஒட்டும் போஸ்டர்கள் எப்போதுமே ஏதாவது ஒரு சலசலப்பை கிளப்பிவிடும். இதற்கு முன்னதாக கடந்த ஆண்டு விஜய்யின் திருமண நாளை முன்னிட்டு அவரை எம்.ஜி.ஆராகவும், அவரது மனைவியான சங்கீதாவை ஜெயலலிதாவாகவும் சித்தரித்து ஒட்டிய போஸ்டர்கள் பெரும் சிக்கலை உருவாக்கியது. இதற்கு அதிமுகவினர் கூட நேரடியாக கண்டனங்களை பதிவு செய்தனர்.

அப்படியிருக்க இன்று மீண்டும் மதுரை ரசிகர்கள் திமுகவினரை சீண்டி பார்க்கும் விதமாக போஸ்டர் ஒன்றை ஒட்டியுள்ளனர். அறிஞர் அண்ணாவின் 113வது பிறந்தநாளை முன்னிட்டு, திமுக உள்ளிட்ட கட்சியினர் மரியாதை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் மதுரையில் நடிகர் விஜய்யை அறிஞர் அண்ணா போல் சித்தரித்து தளபதி ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டர் சோசியல் மீடியாவில் தாறுமாறு வைரலாகி வருகிறது. இதுவரை விஜய் பிறந்தநாள், திருமண நாளில் போஸ்டர் ஒட்டிவந்த ரசிகர்கள், இப்போது அறிஞர் அண்ணாவின் பிறந்த நாளில் இப்படி செய்திருப்பது உடன்பிறப்புகளை உச்சகட்ட கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.