• Wed. Apr 8th, 2026
WhatsAppImage2026-04-03at060700
previous arrow
next arrow
Read Now

விக்னேஷ் சிவன், நயன்தாரா ரகசிய திருமணம்?

2015ம் ஆண்டு வெளியான நானும் ரவுடி தான் படத்தின் ஷூட்டிங்கில் இருந்தே நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஒருவரை ஒருவர் காதலித்து வருகின்றனர். 2022ம் ஆண்டு காத்துவாக்குல ரெண்டு காதல் வெளியாகி உள்ள நிலையில், கிட்டத்தட்ட 7 ஆண்டுகளாக காதலித்து வரும் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன

இந்நிலையில், தற்போது விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் திருப்பதியில் இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகி உள்ளது. அந்த புகைப்படத்தை பார்த்ததுமே நெட்டிசன்கள் திருப்பதியில் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா திருமணம் செய்து கொண்டதாக வதந்திகளை கிளப்பி வருகின்றனர். ஆனால், இருவரும் சாமி தரிசனம் செய்ய மட்டுமே சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா நடித்துள்ள காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் இன்று வெளியாகி உள்ள நிலையில், படம் நல்லா ஓடணும் பெருமாளே என இருவரும் சாமி தரிசனம் செய்ததாக கூறப்படுகிறது.