இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் ‘அவதார்: தி வே ஆஃப் வாட்டர்’ படத்தின் அதிகாரப்பூர்வ தலைப்பு மற்றும் லோகோ இன்று வெளியாகியுள்ளதுஉலக சினிமா ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி காத்துக் எதிரகொண்டிருக்கும் அவதார் படத்தின் இரண்டாம் பாக தலைப்பு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அவதார் இரண்டாம் பாகம் 2022 டிசம்பர் 16 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. “அவதார்” படத்தின் தொடர்ச்சியான இப்படத்தின் தலைப்பு “அவதார்தி வே ஆஃப் வாட்டர்”. முதல் படமான “அவதார்” படத்தின் சம்பவங்களுக்கு பிறகு, ஒரு நூற்றாண்டு மேலான காலத்தை கடந்து , சல்லி குடும்பம் (ஜேக், நெய்திரி மற்றும் அவர்களது குழந்தைகள்), அவர்களைப் பின்தொடரும் பிரச்சனைகள், ஒருவரையொருவர் பாதுகாப்பாக வைத்திருக்க, அவர்கள் செல்லும் தூரம், அவர்கள் உயிருடன் இருக்க போரிடும் போர்கள் மற்றும் அவர்கள் அடையும் துயரங்கள் அதைகடந்த அவர்களின் வெற்றி தான் இப்படத்தின் கதைக்களமாக அமைக்கப்பட்டுள்ளது என தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜேம்ஸ் கேமரூன் இயக்கி, கேமரூன் மற்றும் ஜான் லாண்டாவ் தயாரித்த இப்படத்தில் ஜோ சல்டானா, சாம் வொர்திங்டன், சிகோர்னி வீவர், ஸ்டீபன் லாங், கிளிஃப் கர்டிஸ், ஜோயல் டேவிட் மூர், CCH பவுண்டர், எடி ஃபால்கோ, ஜெமைன் கிளெமென்ட், ஜியோவானி ரிபிசி மற்றும் கேட் வின்ஸ்லெட் ஆகியோர் நடித்துள்ளனர். பார்வையாளர்களின் ஆர்வத்தை தூண்டும் வகையில், *ஸ்டுடியோ “அவதார்” முதல் பாக திரைப்படத்தை செப்டம்பர் 23 அன்று திரையரங்குகளில் மீண்டும் வெளியிடவிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.