செஸ்ஒலிம்யாட் போட்டி விளம்பரபடத்திற்காக முதல்வர் ஸ்டாலினை இயக்குகிறார் விக்னேஷ்சிவன்.
செங்கல்பட்டு மாவட்டம் மகாபலிபுரத்தில், இந்த மாத இறுதியில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறுகிறது. இதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான விளம்பர படம் ஒன்றை விக்னேஷ் சிவன் இயக்குகிறார். இதில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இடம் பெறுவது போன்ற காட்சிகள் உள்ளன. இதற்கான படப்பிடிப்பு சென்னை நேப்பியர் பாலத்தில் இன்று நடைபெற்றது.
இதன் காரணமாக அங்கு சில மணி நேரம் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. முதல்வர் மு.க ஸ்டாலினை வைத்து விக்னேஷ் உருவாக்கும் அந்த விளம்பர படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.
மேலும், மகாபலிபுரத்தில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெற உள்ளது. அந்த விழாவின் படப்பிடிப்பையும் விக்னேஷ் சிவன் இயக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.