திமுக அரசின் நான்கு ஆண்டு சாதனைகள் குறித்த, காணொளி காட்சிகளை உசிலம்பட்டி நகராட்சி சார்பில், எல்.இ.டி திரை மூலம் பொதுமக்களுக்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அரசு பொறுப்பேற்று 4 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து தமிழ்நாடு முழுவதும் திமுக சார்பில் 4 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டங்கள் மற்றும் 4 ஆண்டுகளில் திமுக அரசு செய்த சாதனைகளை பொதுமக்களுக்கு கொண்டு சேர்க்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சி சார்பில் திமுக அரசின் நான்கு ஆண்டு சாதனை குறித்த காணொளி காட்சிகளை உசிலம்பட்டி பழைய பேருந்து நிலையம் முன்பு எல்.இ.டி திரை மூலம் காட்சிபடுத்தப்பட்டுள்ளது.

இந்த எல்.இ.டி திரையை உசிலம்பட்டி நகராட்சி ஆணையாளர் சக்திவேல், நகர் மன்ற துணை தலைவர் தேன்மொழி, உசிலம்பட்டி திமுக நகர செயலாளர் தங்கப்பாண்டியன், வடக்கு ஒன்றிய செயலாளர் அஜித்பாண்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பொதுமக்கள் பார்வைக்காக திறந்து வைத்தனர்.
இன்று முதல் ஒரு மாத காலத்திற்கு திமுக அரசு பொறுப்பேற்ற பின், கொண்டு வரப்பட்ட திட்டங்கள், மகளீருக்கான விடியல் பயணங்கள் குறித்த காட்சிகள் ஒளிபரப்பு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.