• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

திருமணத்திற்கு முக்கிய பிரபலங்களுக்கு மட்டும் அழைப்பு விடுத்த விக்கி-நயன் ஜோடி..

Byகாயத்ரி

May 30, 2022

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இவர் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி உள்ளார். இவருக்கும் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் ஜூன் 9 ஆம் தேதி திருமணம் நடக்க உள்ளது என்று தெரிவித்தனர். இவர்களின் திருமணம் திருப்பதியில் நடக்கும் என்று கூறப்பட்டுள்ளது. தற்போது வெளியான அழைப்பிதழில் மகாபலிபுரம் என்று போட்டிருக்கிறது. அதனைத் தொடர்ந்து திருமணத்திற்கு சினிமா துறைகளை சேர்ந்த அனைவரையும் அழைக்கவில்லை என்றும் மூன்றே மூன்று பிரபலங்கள் மட்டும் அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளது. திருமணத்தை அடுத்து சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சியை பிரம்மாண்டமாக நடத்த போகிறார்களாம்.

அந்த நிகழ்ச்சிக்கு திரையுலக பிரபலங்கள் அழைக்க முடிவு செய்திருக்கிறார்கள். மேலும் திருமண வரவேற்பு நிகழ்ச்சி முடிந்த கையோடு அவரவர் பட வேலையில் ஈடுபட போகிறார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து தனக்கு பிடித்த ஹீரோவான விஜய் சேதுபதி, தன் நெருங்கிய நண்பரான இயக்குனர் நெல்சன் தீலிப்குமர் மற்றும் காத்துவாக்குல இரண்டு காதல் படத்தில் நடித்தபோது பழக்கமான சமந்தா ஆகிய மூன்று பேருக்கு மட்டுமே அழைப்பு விடுத்திருக்கிறார். மேலும் நண்பர் அனிருத்தை ஏன் அழைக்கவில்லை என்று ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுப்பியுள்ளனர்.