நயன்தாரா -விக்னேஷ் சிவன் திருமணம் எப்போது நடைபெறும் என்று ரசிகர்கள் அனைவரும் நீண்ட நாட்களாக எதிர்பார்ப்பில் இருந்தனர். இந்நிலையில் அது குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருமணம் வருகின்ற ஜூன் 9ஆம் தேதி நடைபெற உள்ளது.திருமணத்தை முதலில் திருப்பதியில் நடத்த திட்டமிட்டிருந்த நிலையில் 150 வரை பங்கேற்க அனுமதி வழங்கப்படாததால் தற்போது மகாபலிபுரத்தில் உள்ள ஒரு ரிசார்ட்டில் திருமணம் நடைபெற இருக்கிறது. இதில் இருவரின் உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டும் பங்கேற்க உள்ளனர். மேலும் திருமண நிகழ்வை ஒளிபரப்பும் உரிமையை பிரபல ஓ டி டி நிறுவனம் வாங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.