பிரபல நடிகை ஜாங்கிரி மதுமிதாவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. ஒரு கல் ஒரு கண்ணாடி, காஷ்மோரா, இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் மதுமிதா. பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பகுதியிலேயே வெளியேறினார் .அதிலிருந்து பாதியில் வெளியேறிய நிலையில் மதுமிதா கர்ப்பமாக இருப்பதாக அவரது கணவர் அறிவித்திருந்த நிலையில், அவர்களுக்கு நேற்று அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது. இவருக்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.