தமிழக முன்னாள் முதல்வர் கருணா நிதியின் பிறந்ததினத்தை முன்னிட்டு ஜூன் 3ஆம் தேதி கருணாநிதியின் 16 அடி சிலையை வெங்கையா நாயுடு திறந்து வைக்கிறார்.
மறைந்த முன்னாள் முதல மைச்சர் கருணாநிதியின் பிறந்த தினமான ஜூன் 3ஆம் தேதி அரசு விழா வாக இந்த ஆண்டு முதல் கொண்டாடப் பட உள்ளது. அன்றைய தினம் சென்னை ஓமந் தூரார் அரசினர் தோட்டத்தில் கருணாநிதிக்கு 16 அடி உயர வெண்கல சிலை நிறுவப்படு கிறது. 12 அடி பீடம் அமைக்கப்பட்டு அதில் கருணாநிதியின் முழு உருவ வெண்கல சிலை அமைக்கப்படுகிறது. இந்த சிலை அண்ணா அறிவாலயம் முன்பு வைக்கப்பட்டுள்ள கருணாநிதி சிலை போன்று தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டு வருகிறது. மீஞ்சூரில் சிற்பி தீனதயாளன் இந்த சிலையை வடிவ மைத்து வருகிறார். சமீபத்தில் வெங்கையா நாயு டுவை அவரது வீட்டில் முதல மைச்சர் மு.க.ஸ்டாலின், சென்று சந்தித்து பேசினார். அவருடன் தலைமைச் செயலாளர் வெ. இறை யன்பு சென்றிருந்தார். அப்போது ஜூன் 3ஆம் தேதி அரசு சார்பில் நடைபெறும் கருணாநிதியின் சிலை திறப்பு விழாவில் பங்கேற்று சிலையை திறந்து வைக்க வேண்டும் என்று வெங்கையா நாயுடுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்தார். இந்த மாத இறுதிக்குள் சிலை செய்து முடிக்கப்பட்டுவிடும் என்பதால் பீடம் அமைக்கும் பணியும் ஓமந்தூரார் வளாகத்தில் இப்போதே தொடங்கிவிட்டது. இதற்காக கிரானைட் கற்களை தேர்வு செய்ய அதிகாரிகள் ஜெய்ப்பூர் சென்றுள்ளார்.