• Tue. Dec 10th, 2024

கல்லட்டி மலைப்பாதையில் அசுர வேகத்தில் பறக்கும் வாகனங்கள்

கல்லட்டி மலைப்பாதையில் அசுர வேகத்தில் சாலை விதிகளை பின்பற்றாமல் செல்லும் வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.
உதகையில் இருந்து மசினகுடி செல்லும் கல்லட்டி மலைப்பாதை 36 கொண்டை ஊசி வளைவுகளை கொண்டது.இந்த மலைப்பாதையில் கேரளா, கர்நாடகா மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் வரும் வாகனங்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகி உயிரிழப்புகள் தொடரும் சோகம் அரங்கேறி வருகிறது.இந்நிலையில் கல்லட்டி மலைப்பாதையில் ஏற்படும் விபத்துக்களை தவிர்க்கும் வகையில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் செங்குத்தான பகுதியில் கீழ் நோக்கி செல்லும் வாகனங்களின் வேகத்தை குறைக்கும் வகையில் சுமார் 7 லட்சம் ரூபாய் மதிப்பில் 8 வேகத்தடை மற்றும் சாலையின் குறுக்கே தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளது.
ஆனால் கட்டுப்பாட்டுகளை அலட்சியமாக கருதும் சில வாகன ஓட்டிகள் அசுர வேகத்தில் சாலை விதிகளை பின்பற்றாமல் வாகனங்களை இயக்குகின்றார்கள் .. சம்பந்தப்பட்ட துறையினர் இந்த விஷயத்தில் கடுமையான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இதுபோன்ற விஷயங்கள் கட்டுப்பாட்டுக்குள் வரும். என்று சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.