• Wed. Aug 5th, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

சோழவந்தான் தொகுதியில் வாகன சோதனை ரூ.2.37லட்சம் பறிமுதல்..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதி தேர்தல் நிலை கண்காணிப்பு குழு அதிகாரி தினேஷ்குமார் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் சரஸ்வதி, ஏட்டு கனகராஜாஆகியோர் வாகன சோதனை செய்தனர்.

அப்போது சாணாம்பட்டி தமிழ்நாடு நுகர்பொருள் வணிப கிடங்கி முன்பாக அய்யம்பாளையத்தை சேர்ந்த அருண்பாண்டி (30) என்பவர் ஓட்டி வந்த வேனை சோதனை செய்த போது அதில் எந்தவித ஆவணமும் இல்லாமல் வைத்திருந்த ரூ.76,000 பறிமுதல் செய்தனர். அதேபோல கன்னியாகுமரியை சேர்ந்த ஆறுமுகம்(49) என்பவர் ஓட்டி வந்த காரை சோதனை செய்தபோது அதில் எந்தவித ஆவணமும் இல்லாமல் வைத்திருந்த ரூ.1,61,500 பறிமுதல் செய்தனர்.

வாடிப்பட்டி தாலுகா அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை அதிகாரி சண்முக வடிவேல், உதவி தேர்தல் அதிகாரி தாசில்தார் ராமச்சந்தி ரன்,மற்றும் மண்டல துணை தாசில்தார் செந்தில்குமார், தேர்தல் துணை தாசில்தார் கருப்பையா ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்த பின் சார்நிலை கருவூலத்தில் ஒப்படைத்தனர்.