

தேனி அருகே சிவசேனா கட்சி சார்பில் வீரபாண்டி கட்டபொம்மன் பிறந்த நாளை முன்னிட்டு, அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் சுதந்திரத்திற்காக வீர முழக்கமிட்ட மாவீரர் வீரபாண்டிய கட்ட பொம்மன் 263 ஆம் ஆண்டு பிறந்த நாள் இன்று (ஜன.3) நாடு முழுவதும் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. தேனி மாவட்டம் சடையால் பட்டி மற்றும் போடி நாயக்கனூர் என இரண்டு இடங்களில் அமைந்துள்ள அவரது திருஉருவ சிலைக்கு, தேனி மாவட்ட சிவசேனா கட்சி சார்பில் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் குரு ஐயப்பன், அமைப்பாளர் முருகவேல், பொதுச் செயலாளர் கருப்பையா, துணைச் செயலாளர் சசிக்குமார் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
