தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் சுதந்திர போராட்ட வீரர்கள் வீரபாண்டிய கட்டபொம்மன் மற்றும் வீரமங்கை வேலுநாச்சியாரின் பிறந்தநாள் விழா, இந்து முன்னணி அமைப்பின் சார்பில் விமரிசையாக கொண்டாடப்பட்டது.

வீரபாண்டிய கட்டபொம்மனின் 263 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு ஆண்டிபட்டி பஸ் நிலையம் அருகில் மாலை கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த கட்டபொம்மனின் திருவுருவ படத்திற்கு இந்து முன்னணி மாவட்ட செயலாளர் டாக்டர். எஸ்பிஎம். செல்வம் தலைமையில் ,மாவட்ட செயற்குழு உறுப்பினர் மொக்கராசு முன்னிலையில் அவரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் நிர்வாகிகள் கருப்பையா, முனீஸ்வரன், மனோஜ்குமார், பகவதி ராஜ்குமார் ,ராஜேஷ் ,பால்பாண்டி ,ஜெயபாலன், பிரசன்னா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதனையடுத்து இந்து அன்னையர் முன்னணி சார்பில் வீரமங்கை வேலுநாச்சியாரின் திருவுருவ படத்திற்கு மாவட்ட செயலாளர் ஜெயலட்சுமி தலைமையில், நகர தலைவி சுந்தரி முன்னிலையில் வேலுநாச்சியாரின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நகர செயலாளர்கள் நாகரத்தினம், ஜெயந்தி ஒன்றிய செயலாளர் பழனியம்மாள் உள்பட ஏராளமான அன்னையர் முன்னணி அமைப்பினர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பொதுமக்கள் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.