இன்று தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இலவச வீட்டு மனை பட்டா கோரி தலித் நில உரிமை இயக்க ஒருங்கிணைப்பாளர் முருகேசன் தலைமையில் மனு கொடுக்கப்பட்டது.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ஒன்றியம் அரப்படித் தேவன்பட்டி காலனியைச் சேர்ந்த சுமார் 30 குடும்பங்கள் கூட்டுக் குடும்பமாக ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். இட நெருக்கடியால் கஷ்டப்படும் இவர்கள் அரசிடம் இலவச வீட்டுமனை கோரி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு கொடுத்தனர்.கடந்த 10 ஆண்டு களுக்கும் மேலாக மனு கொடுத்து வரும் இவர்களது மனு மீது நடவடிக்கை எடுக்கும் பொருட்டு ஆண்டிபட்டி வட்டாட்சியருக்கு ஆட்சியர் பரிந்துரை செய்தாலும் வட்டாட்சியர் நடவடிக்கை எடுப்பதில்லை. ஆனால் எப்படியாவது அரசு வீட்டு மனை வழங்கும் என்ற நம்பிக்கையுடன் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறார்கள்.
இந்த நிகழ்வில் அருந்ததியர் சமூக நீதிக்கான அமைப்பின் நிர்வாகி பாலமுருகன், கோபால், கருப்பன் மற்றும் பலர் கோரிக்கையை வலியுறுத்தி பங்கேற்றனர்.