மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே மேலக்குயில்குடி கிராமம் அமைந்துள்ளது. இக்கிராமத்தில் ஒரு பகுதியான ஆதி சிவன் நகர் பகுதியில், கடந்த 2024 ஆம் ஆண்டு தமிழக அரசு சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்டத்தின் கீழ் வீட்டு மனை இடங்கள் தேர்வு செய்யப்பட்டு வழங்கப்பட்டன. அப்பகுதியில் சுமார் 24 மாற்றுத்திறனாளி நபர்களுக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டு, பட்டா மற்றும் நிலமும் அளிக்கப்பட்டது.

இந்தத் திட்டத்தின் கீழ் நிலம் பெற்றவர்களில் மாற்றுத்திறனாளி சின்னகன்னு.அரசு வழங்கிய அந்த இடத்தை மற்றொரு நபர் தன்னிச்சையாகவும், எவ்வித உரிமமும் இன்றி ஆக்கிரமிப்பு செய்துள்ளார். அதுமட்டுமின்றி, சின்னகன்னு தனது வீட்டிற்குச் செல்லும் வழியையும் சேர்த்து முள்வேலி அமைத்து முற்றிலுமாக அடைத்துள்ளார்.

மேலும் இது குறித்து மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முறைப்படி மனு அளித்துள்ளார்.நாகமலை புதுக்கோட்டை காவல் நிலையத்திலும் புகார் மனு அளித்துள்ளார்.ஆனால் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிவித்தார்.

அரசு வழங்கிய சட்டப்பூர்வமான உரிமையை நிலைநாட்டவும், தனது வீட்டிற்குச் செல்ல வழி ஏற்படுத்தித் தரவும் மாற்றுத்திறனாளி முத்தையா தற்போது தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்.




