• Sat. Oct 12th, 2024

இந்தி எழுத்து மீது தார்பூசி அழிக்கும் போராட்டம்… கி வீரமணி உள்பட பலர் கைது

ByA.Tamilselvan

May 1, 2022

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இந்தி அழிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட திராவிடர் கழக தலைவர் கி வீரமணி உள்பட ஏராளமானவர்கள் கைது செய்யப்பட்டனர்.
மத்திய அரசின் மும்மொழி கொள்கை, நீட் தேர்வு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களுக்கு எதிராக . கி வீரமணி. பிரசாரம் செய்து வருகிறார். தமிழகம் முழுவதும் நீட் விலக்கு பொதுக்கூட்டம் நடத்தி வருகிறார். இந்த கூட்டத்தில் அவர் மத்திய அரசுக்கு எதிராக கடுமையாக பேசி வருகிறார்.
இந்தியை திணிக்க மத்திய அரசு முயற்சிப்பதாக அவர் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். இதை தொடர்ந்து சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இந்தி எழுத்துக்கள் அழிப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்து இருந்தார்.
கி.வீ ரமணி தலைமையில் திராவிட கழகத்தினர் பெரியார் திடலில் இருந்து புறப்பட்டு, ஈவெரா. நெடுஞ்சாலை வழியாக ஊர்வலமாக எழும்பூர் ரயில் நிலையம் வந்தனர். அங்கு தடையை மீறி ரயில் நிலையத்துக்குள் சென்று இந்தியை அழிக்க முயன்றனர். போலீசார் வீரமணி உள்ளிட்டோரை கைது செய்தனர். இந்தப் போராட்டம் காரணமாக, எழும்பூர் ரயில் நிலையத்தில் பலத்தபோலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. முன்னதாக இந்த போராட்டத்தை இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா முத்தரசன் தொடங்கி வைத்தார். அப்போது பேசிய கி வீரமணி இந்தி எழுத்தை அழிப்பதன் மூலம் கலாச்சார, பண்பாட்டு திணிப்பை நாம் எதிர்க்கிறோம். 1938ம் ஆண்டு பெரியார் காலத்தில் தொடங்கிய இந்தக் கலாச்சார திணிப்புக்கு எதிரான போராட்டம் இன்றுவரை தேவைப்படுகிறது. இந்த மண் காவி மண் அல்ல. இது பெரியார் மண்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *