மதுரை ஆஞ்சநேயர் திருக்கோயிலில் வரலட்சுமி நோன்பை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு பூஜையில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு நோன்பு கயிறு, நாணயங்கள் உள்ளிட்ட பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
மதுரை கிருஷ்ணராயர் தெப்பக்குளம் பகுதியில் அமைந்துள்ளதும், அருள்மிகு மதனகோபால சுவாமி திருக்கோவிலுக்கு உட்பட்ட கோயிலுமான , அருள்மிகு ஆஞ்சநேயர் திருக்கோயிலில் இன்று வரலட்சுமி நோன்பை முன்னிட்டு மகாலட்சுமிக்கு சிறப்பு ஹோமங்கள் நடைபெற்றன. மகா கணபதி ஹோமத்துடன் துவங்கி தொடர்ந்து விக்னேஸ்வர ஹோமம், யாகவேள்வி போன்றவை நடத்தப்பட்டு அஷ்ட லட்சுமிகளுக்கும் ஹோமங்கள் பூர்ணஹீதி போன்றவை நடத்தப்பட்டன. தொடர்ந்து உற்சவ மூர்த்திக்கு திருமஞ்சன சேவை நடத்தப்பட்டு அம்பாள் ராஜலட்சுமி அலங்காரத்தில் புஷ்பா அங்கி சேவை சாதித்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
நிகழ்வில் பெண்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.மேலும் தங்களது வீடுகளில் வரலட்சுமி நோன்பு இருக்கும் பெண்களுக்கு கோயிலில் இருந்து நோன்பு கயிறு உள்ளிட்ட பொருள்கள் பிரசாதமாக வழங்கப்பட்டன. மேலும் மகாலட்சுமி திருமஞ்சனத்தின் போது அபிஷேகத்தில் பயன்படுத்தப்பட்ட நாணயங்களும் குபேர கயிறு எனும் குங்குமத்தால் அர்ச்சனை செய்த பச்சைக் கயிறு போன்றவையும் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.