


ஒன்றிய அரசின் வக்பு சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி நாகப்பட்டினம் அவுரித்திடலில் தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கவுரவத்தலைவர் முகம்மதுஇஸ்ஹாக்பார்கவி தலைமை வகித்தார். திட்டச்சேரி வட்டார செயலாளர் ஷாஹ¨ல்அமீது வரவேற்றார். இஸலாமியர்களின் சொத்துக்களை அபகரிக்கும் நோக்குடன் கொண்டுவந்துள்ள வக்பு சட்டத்தை ஒன்றிய அரசு திரும்ப பெற கோரி கோஷங்கள் எழுப்பினர்.
தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் கவுதமன்,எம்பி செல்வராஜ், கீழ்வேளூர் தொகுதி எம்எல்ஏ நாகைமாலி, நகர்மன்ற தலைவர் மாரிமுத்து, துணைத்தலைவர் செந்தில்குமார், காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் அமிர்தராஜா, முன்னாள் எம்எல்ஏ நிஜாமுதீன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் நசீர்கான்,செயலாளர் அப்துல்கரீம் மற்றும் பலர் கலந்து கொண்டனர். வேதாரண்யம் வட்டார செயலாளர் முகம்மதுபிலால் நன்றி கூறினார்.


