• Wed. Nov 25th, 2026
WhatsApp Image 2026-11-20 at 00.10.17 (2)
previous arrow
next arrow
Read Now

வலிமை ரிலீஸ் தேதி அறிவிப்பு!

நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருந்த நடிகர் அஜித் நடித்துள்ள வலிமை திரைப்படம் கடந்த பொங்கலை முன்னிட்டு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக இந்தப் படம் மீண்டும் தள்ளி வைக்கப்பட்டது.

தற்போது, தொற்று பரவல் குறைந்து வரும் நிலையில் பல்வேறு மாநிலங்கள் தளர்வுகளை அறிவித்து வருகின்றன. இதனையடுத்து பெரிய படங்களின் வெளியீட்டு தேதிகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

நடிகர் சிவகார்த்திகேயனின் டான் திரைப்படமும், இயக்குநர் ராஜமௌலியின் ஆர்ஆர்ஆர் திரைப்படமும் மார்ச் 25 ஆம் தேதி வெளியாகவுள்ளன. விஷாலின் வீரமே வாகை சூடும் திரைப்படம் வருகிற 4 ஆம் தேதி திரைக்குவரவிருக்கிறது.

ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி நடிகர் விஜய்யின் பீஸ்ட் மற்றும் கேஜிஎஃப் 2 படங்கள் வெளியாகவிருக்கின்றன. மேலும் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படம் மார்ச் 10ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று இயக்குநர் பாண்டிராஜ் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் எச்.வினோத் இயக்கத்தில், நடிகர் அஜித் நடித்துள்ள வலிமை திரைப்படம் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில் வலிமை திரைப்படம் பிப்ரவரி 24 ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் இயக்குநர் எச்.வினோத் இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். வலிமை படத்திற்கு யுவன் இசையமைத்துள்ளார்.