• Sat. Apr 4th, 2026
WhatsAppImage2026-04-03at060700
previous arrow
next arrow
Read Now

அல்லு அர்ச்சுன் நடித்த வைகுந்தபுரம்லோ இந்திவெளியீட்டை நிறுத்தினார்கள்

அல்லு அர்ஜுனின் ‘அலா வைகுந்தபுரம்லோ’ படத்தின் இந்தி டப்பிங் வெளியீட்டை கைவிட்டுள்ளது தயாரிப்பு நிறுவனம்.அல்லு அர்ஜுன் – பூஜா ஹெக்டே நடிப்பில் கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியாகி தென்னிந்தியாவில் சூப்பர் ஹிட் அடித்தது த்ரிவிக்ரம் இயக்கிய ‘அலா வைகுந்தபுரம்லோ’. இப்படத்தினைத் தொடர்ந்து அல்லு அர்ஜுன் நடித்த ‘புஷ்பா’ பான் இந்தியா படமாக வெளியாகி பாலிவுட்டில் வசூலைக் குவித்து வருகிறது.

இதனால், ‘அலா வைகுந்தபுரம் லோ’ படத்தினை இந்தியில் டப்பிங் செய்து வரும் ஜனவரி 26 ஆம் தேதி வெளியிடுவதாக அறிவித்திருந்தார் தயாரிப்பாளர் மணிஷ் கிரிஷ் ஷா. ஆனால், இப்படம் இந்தியில் வெளியானால் தங்கள் படத்தின் வணிகம் பாதிக்கும் என்று கார்த்திக் ஆர்யனின் ’ஷெஸாடா’ படக்குழுவினர் அதிருப்தி தெரிவித்திருந்தனர்.

ஏனென்றால், ‘அலா வைகுந்தபுரம்லோ’ படம் இந்தியில் ‘ஷெஸாடா’வாக ஆர்யன் கான் – கீர்த்தி சனோன் நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. ரோகித் தவான் இயக்கி வருகிறார்.இந்த நிலையில், ’ஷெஸாடா’ படக்குழுவினரின் அதிருப்தியைத் தொடர்ந்து இந்தி வெளியீட்டைக் கைவிட்டுள்ளார் தயாரிப்பாளர் மணிஷ் கிரிஷ் ஷா. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை கூட்டறிக்கையாக அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளனர்.