• Thu. Oct 8th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள மும்மொழி படம் ரீலீஸ் தேதி அறிவிப்பு

கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ‘குட்லக் சகி’ தெலுங்குபடத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்திருக்கிறது படக்குழு.நடிகை கீர்த்தி சுரேஷ் தெலுங்கில் மகேஷ் பாபுவுடன் ‘சர்காரு வாரிபாட்டா’, ‘குட்லக் சகி’ படங்களில் நடித்து முடித்துள்ளார்.

இதில், ’குட்லக் சகி’ படத்தின் வெளியீட்டு தேதியை தற்போது அறிவித்திருக்கிறது படக்குழு. நாயகிக்கு முக்கியத்துவம் கொண்ட இப்படத்தினை நாகேஷ் குக்குனூர் இயக்கியுள்ளார். ஜகபதி பாபு, ஆதி உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள்.

கடந்த 2019 ஆம் ஆண்டு ’குட்லக் சகி’ படப்பிடிப்பு துவங்கியது. படப்பிடிப்பை உடனடியாக முடித்தாலும் கொரோனாவால் இரண்டு ஆண்டுகளாக வெளியிட முடியவில்லை.இந்த நிலையில், தற்போது முன்னணி நடிகர்களின் படங்கள் கொரோனாவால் ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் படத்தின் வெளியீட்டை உறுதி செய்துள்ளனர் படக்குழுவினர்.

வரும் ஜனவரி 28 ஆம் தேதி ‘குட்லக் சகி’ தியேட்டர்களில் வெளியாகிறது என்று நடிகை கீர்த்தி சுரேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார். ‘குட்லக் சகி’ தெலுங்கு மட்டுமல்லாமல் தமிழ் மற்றும் மலையாளத்திலும் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.