

கடலூர் மாவட்டம் வடலூரில் நடைபெறும் சனிக்கிழமை வாரச் சந்தை மிகவும் பிரபலமானது. ஆடு, மாடு, கோழி, முயல் உள்ளிட்ட கால்நடைகளை விற்பனை செய்து வருகின்றனர். பல்வேறு பகுதிகளிலிருந்தும் மொத்த வியாபாரிகளும், சில்லறை விற்பனையாளர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் வாங்கிச் செல்கின்றனர்.
இந்நிலையில், தீபாவளியை ஒட்டி, விவசாயிகளும், வியாபாரிகளும், பொதுமக்களும் பெருமளவில் குவிந்துள்ளனர். இதனால் ஆடு, மாடு போன்ற கால்நடைகள் விலை அதிகரித்துக் காணப்படுகிறது. இதனால் 4000 முதல் 10 ஆயிரம் வரை எடைக்கு தகுந்தார் போல் ஆடுகள் விற்பனை செய்யப்படுகிறது.

கடலூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து கொண்டுவரப்பட்டுள்ளது நாட்டுரக மாடுகள் விற்பனை அமோகமாக உள்ளது. விலை அதிகரித்து விற்பனை ஆவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தள்ளனர். அதேபோல், முயல் ஒரு ஜோடி 400 முதல் 1300 வரையிலும், புறா 500 முதல் 1000 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது.
இதனை வாங்க பெங்களூரு, சேலம், ,நாமக்கல், புதுவை உள்ளிட்ட பல இடங்களில் இருந்து வியாபாரிகள் வந்து குவிந்துள்ளனர்.
