

வங்ககடலில் ஏற்பட்டு உள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக கன்னியாகுமரி மாவட்டம் மேற்கு தொடற்சி பகுதிகளில் பெய்து வரும் தொடர் கன மழையால் திற்பரப்பு அருவியில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது இதனால் சுற்றுலா பயணிகள் அருவியில் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கன்னிமார் பகுதியில் 95.4 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது தொடர் மழை காரணமாக இன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அரவிந்த் அறிவித்துள்ளார்.
வங்கக்கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை மற்றும் இலங்கை கடல் பகுதிகளில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில், தக்கலை, மார்த்தாண்டம், குலசேகரம், பேச்சிப்பாறை பெருஞ்சாணி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவு விடிய விடிய மழை பெய்ததுடன், இன்றும் மழை பெய்து வருகிறது.
மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக முக்கிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது குலசேகரம் அருகே உள்ள திற்பரப்பு நீர்வீழ்ச்சியில் இன்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் விடுமுறை நாட்களை கொண்டாட வரும் சுற்றுலா பயணிகளுக்கு, அருவிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பேச்சிப்பாறை பெருஞ்சாணி சிற்றாறு 1, சிற்றாறு 2 ஆகிய அணைகளில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு காரணமாக உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 42 அடியாகவும் அணைக்கு வினாடிக்கு ஆயிரத்து 360 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் வினாடிக்கு ஆயிரத்து 635 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதேபோன்று 77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 72 அடியாக உயர்ந்தது உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1093 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருப்பதால், வினாடிக்கு 800 கனஅடி உபரி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
கடந்த 24 மணிநேரத்தில் மாவட்டத்தில் அதிகபட்சமாக கன்னிமார் பகுதியில் 95.4 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது இதேபோல் சுருளோடு பகுதியில் 72 மில்லி மீட்டர் மழையும், பெருஞ்சாணி அணை பகுதியில் 60 மில்லி மீட்டர் மழையும் பதிவாகிஉள்ளது. இதனால் தாமிரபரணி ஆறு, பரளியாறு உள்ளிட்ட முக்கிய ஆறுகளில் வெள்ள அபாய எச்சரிக்கை தொடர்கிறது இரவு முழுவதும் விடிய விடிய மாவட்டம் முழுவதும் கனமழை பெய்த காரணத்தால் இன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
விசுவல்
- திற்பரப்பு அருவியில் ஏற்பட்டு உள்ள வெள்ளப்பெருக்கு சுற்றுலா பயணிகள் திரும்பி செல்லும் காட்சிகள்.
- சிற்றாறு அனைகளில் உபரி நீர் வெளியேற்றுதல்.
