• Fri. Jul 24th, 2026
WhatsAppImage2026-07-23at2343124
previous arrow
next arrow
Read Now

நாளை மறுதினம் தடுப்பூசி முகாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

ByA.Tamilselvan

Sep 23, 2022

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் முடிவுற்ற கட்டிடப்பணிகளை திறந்து வைப்பதற்காக அமைச்சர் மா. சுப்பிரமணியன் இன்று காலை தூத்துக்குடி வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் பேசும்போது..
தமிழகத்தில் பரவி வரும் காய்ச்சலை கட்டுப்படுத்துவதற்கு தொடர்ந்து சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. 3 நாட்கள் இருக்கும் இந்த காய்ச்சலானது பருவநிலை மாற்றத்தால் மட்டுமே ஏற்படுகிறது என்றாலும் இந்த காய்ச்சலை தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
எந்தெந்த பகுதியில் 3 பேருக்கு அதிகமான நபர்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதோ அந்த இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம் நேற்று முதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்த மாதம் 30-ந் தேதி வரை பூஸ்டர் தடுப்பூசிகள் இலவசம். வருகிற 25-ந்தேதி 50 ஆயிரம் இடங்களில் முகாம்கள் நடத்தப்பட உள்ளது. 14 முதல் 17 வயது வரையிலான மாணவ, மாணவிகளுக்கு வருகிற 4-ந் தேதி பள்ளிகளில் சென்று தடுப்பூசி செலுத்தப்படும். மருத்துவம் சார்ந்த 4,308 காலி பணியிடங்கள் உள்ளன. அவை அனைத்தும் 2 மாதத்திற்குள் முழுமையாக நிரப்பப்படும். இவ்வாறு அவர் கூறினார்.