• Tue. Aug 11th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

கட்டிடப் பொருட்களைக் குறி வைக்கும் ‘ஆட்டோ’ திருடர்கள்..,

BySeenu

Jul 24, 2026

​ கோவை, ஈச்சனாரி பகுதியில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் கட்டுமான தளத்தில் இருந்து, வாடகை ஆட்டோவில் வந்து சாவகாசமாக இரும்புக் கம்பிகளைத் திருடிச் சென்ற வாலிபரின் சி.சி.டி.வி (CCTV) காட்சிகள் வெளியாகி, அப்பகுதி வீட்டின் உரிமையாளர்கள் மற்றும் பில்டர்கள் இடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.

கோவை மாநகர் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் ஆள் நடமாட்டம் இல்லாத மற்றும் காவல் குறைவான புதிய கட்டுமானப் பகுதிகளைக் குறி வைத்து, கம்பி உள்ளிட்ட விலை மதிப்புள்ள பொருட்களைத் திருடும் சம்பவங்கள் அண்மைக் காலமாக அதிகரித்து வருகின்றன.

​ஈச்சனாரி பகுதியில் கட்டப்பட்டு வரும் புதிய வீட்டிற்குத் தேவையான இரும்புக் கம்பிகளை, பக்கத்துச் சந்துப் பகுதியில் பாதுகாப்பாக வைத்து இருந்தனர்.

அப்போது அங்கு வாடகை ஆட்டோவில் நைஸாக வந்து இறங்கிய வாலிபர் ஒருவன், சுற்றும் முற்றும் நோட்டமிட்டு விட்டு, “ப்ரோ வண்டி ஆஃப் பண்ணுங்க ப்ரோ…” என ஆட்டோ டிரைவரிடம் கூறியபடி, அங்கு இருந்த கம்பிகளைத் தூக்கி ஆட்டோவில் ஏற்றித் தப்பியோடி உள்ளான்.

இந்தக் காட்சிகள் அனைத்தும் அங்குப் பொருத்தப்பட்டு இருந்த சி.சி.டி.வி கேமராவில் மிகத் தெளிவாகப் பதிவாகி உள்ளன.

மேலும், “புதிதாக வீடு கட்டுபவர்கள் மற்றும் கான்ட்ராக்டர்கள் தங்களின் கட்டுமானப் பொருட்கள் வைக்கப்பட்டு இருக்கும் இடங்களில் கட்டாயம் கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்திப் பாதுகாக்க வேண்டும்” எனச் சமூக ஆர்வலர்கள் இந்த வீடியோவுடன் இணையத்தில் பதிவிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

பட்டப் பகலில் வாடகை ஆட்டோவையே திருட்டிற்குப் பயன்படுத்திய இந்தத் துணிச்சல் சம்பவம் கொங்கு பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.