• Sat. Apr 20th, 2024

நீலகிரி மாவட்டத்தில் கோமேரி நோய்க்கான தடுப்பூசி முகாம்

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கால்நடைகள் வளர்த்து வரும் விவசாயிகளின் வீட்டிற்கு சென்று கால்நடைகளுக்கு கோமாரி நோயின் தடுப்பூசி கால்நடை மருத்துவர்கள் மூலம் போடப்பட்டு வருகின்றனர்.
மூன்றாம் கட்டமாக கிண்ணக்கொரை இரியசீகை தாய்சோலை மேல்குந்தா கூர்மையாபுரம் முள்ளிமலை கெச்சிகட்டி பூதியாட கண்டி கரிமலை பெரியார் நகர் மஞ்சூர் பகுதிகளுக்கு தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்பு துறை நீலகிரி மாவட்ட தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் மூலமாக( NADCP )கோமாரி நோய் தடுப்பூசி திட்டம் மூன்றாவது சுற்றி கால்நடை மருத்துவர் மோகன் குமார் அனைத்து இடங்களுக்கும் சென்று கால்நடைகளுக்கு செலுத்தப்பட்டு வருகின்றனர். தொடர்ந்து அனைத்துப் பகுதிகளுக்கும் சென்று தடுப்பூசி செலுத்தப்பட உள்ளதாகவும் வெறி நாய் கடிக்கான தடுப்பூசி ரேபிஸ் தடுப்பூசி போன்றவற்றை கால்நடை மருத்துவமனையில் தினம்தோறும் போடப்பட்டு வருவதாகவும் தெரிவித்தனர். கால்நடை சம்பந்தப்பட்ட ஆடு மாடு கோழி நாய் பூனை போன்றவற்றிற்கான தடுப்பூசிகளும் நோய்களை கண்டறிந்து அதற்கான தடுப்பூசிகளும் கால்நடை மருத்துவமனையில் போடப்பட்டு வருகின்றனர் அனைத்து மக்களும் பயன்படுத்திக் கொள்ளுமாறு மருத்துவர் கேட்டுக் கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *