• Sat. Jan 3rd, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

தடுப்பூசி சிலுத்திக் கொண்ட முதியவர் உயிரிழிப்பு – திண்டுக்கல்லில் பரபரப்பு!..

Byமதி

Oct 4, 2021

தமிழகம் முழுவதும் நேற்று நான்காவது வாரமாக மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. அதில் திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டியில் நடைபெற்ற முகாமில் ராஜா என்பவர் முதல் தவணையாக கோவிஷீல்டு தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளார்.

இந்நிலையில் வீட்டுக்கு வந்த அவர் இரண்டு மணி நேரத்தில் நெஞ்சுவலிப்பதாகவும் மயக்கம் வருவதாக கூறி கிழே விழுந்துள்ளார். இதையடுத்து அவரை, அவசரம் அவசரமாக ஆத்தூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தூக்கிச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் ராஜா ஏற்கனவே இறந்து விட்டதாக கூறி உள்ளனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து செம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்