சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் அருகே கொடைக்காரன் வளவு பகுதியில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவனை விஷ ஊசி போட்டு கொன்றதாக பரபரப்பு
சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் அருகே கொடைக்காரன் வளவு பகுதியை சேர்ந்த பெரியசாமி மகன் வண்ண தமிழ் (15) இவருக்கு ஒன்றரை வருடங்களுக்கு முன்பு ஒரு விபத்தில் காலில் ஏற்பட்ட காயத்தால் சேலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார் நாளடைவில் அவரை பரிசோதித்த மருத்துவர் கேன்சர் உள்ளதாக கூறியுள்ளார் இதனைத் தொடர்ந்து கோவை மருத்துவமனைக்கு கொண்டுசென்று ஒன்றரை வருடமாக சிகிச்சை அளித்து வந்துள்ளனர் இந்நிலையில் நேற்று இரவு சிறுவனின் தந்தை எடப்பாடி உள்ள மருத்துவரை அழைத்து விஷ ஊசி போட்டுக் கொன்றதாக கொங்கணாபுரம் காவல் துறையில் புகார் தொடர்ந்து கொங்கணாபுரம் காவல்துறையினர் சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரித்து வருகிறார்கள்