தமிழ்நாடு எலக்ட்ரிசிட்டி போர்டு எம்ப்ளாயீஸ் பெடரேசனை சப் சிவகங்கை மாவட்ட செயற்குழு கூட்டம் 02/10/2021 அன்று திருப்பத்தூரில் மாவட்ட தலைவர் சாத்தையா அவர்கள் தலைமையில் நடைபெற்றது
கூட்டத்தில் மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன் செயலாளர் அறிக்கை வாசித்தார் கூட்டத்தில் மதுரை ராஜாங்கம் தேனி மூக்கையா திண்டுக்கல் சுப்பிரமணியன் விருதுநகர் ஞானகுரு மண்டல் செயலாளர் ஷாஜஹான் தூத்துக்குடி அலெக்சாண்டர் கலந்து கொண்டனர்
மாநில உபதலைவர் அய்யாத்துரை மாநில தலைவர் மணிகண்டன் மாநில பொதுச்செயலாளர் சேக்கிழார் சிறப்புரை ஆற்றினர் செயற்குழுவில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
மின்சார வாரியத்தில் காலியாக உள்ள 50000 காலிப்பணியிடங்களை நிரப்புவது மீதமுள்ள 5000 கேங்மேன் பணியிடங்களை பணி நியமனம் செய்வது வெளிமாவட்டங்களில் இருந்து பணி செய்து வரும் கேங்மேன் பணியாளர்களை சொந்த மாவட்டங்களுக்கு பணியிடமாற்றம் செய்வது காலியாக உள்ள பகுதி நேர பணியாளர் பணியிடங்களை நிரப்புவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
மின்வாரியத்தில் காலிப்பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும்!
